முல்லைப் பெரியாறு நீர்மட்ட பிரச்னை: தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

04 July20 Mullai periyaar - 2026

புது தில்லி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைக்க உத்தரவிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், இதுபற்றி அணையின்  துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பு கருதி, நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 139 அடியாகக் குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழே குறைக்க உத்தரவிட முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனர். அதேநேரம், இதுபற்றி அணையின் துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், அந்த முடிவை தமிழக-கேரள அரசுகள் மதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புக்காக எடுத்த நடவடிக்கை பற்றி கேரள அரசு 24ஆம் தேதி அறிக்கை தரவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

Related articles

Recent articles

spot_img