சபரிமலை சர்ச்சைப் பெண் ரஹேனா பாத்திமாவை இடமாற்றம் செய்தது பிஎஸ்என்எல்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

rehena fatima - 2026கொச்சி: சபரிமலை குறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு, பி.எஸ்.என்.எல்., தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் ரஹேனா பாத்திமாவை, உடனடியாக பணியிட மாற்றம் செய்தது பி.எஸ்.என்.எல்.

மேலும், இந்த விவகாரம் குறித்து துறை ரீதியான உள் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கொச்சி போட் ஜெட்டி பிராஞ்சில் இருந்து ரவிபுரம் பிராஞ்சுக்கு பாத்திமா இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாகவும், பொது மக்களுடனான நேரடித் தொடர்பைத் தவிர்க்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரஹேனா பாத்திமாவின் பேஸ்புக் பக்கங்கள் குறித்தும் அவர் அதில் சபரிமலை விவகாரத்தில் தெரிவித்திருந்த கருத்துகள் குறித்தும் விசாரிக்குமாறும் விசாரணைக் குழுவுக்கு பிஎஸ்.என்.எல்., நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.