மனிதனுக்கு பதவி ஆசை இருக்கலாம்; பதவி வெறி இருக்கக் கூடாது: செந்தில்பாலாஜிக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் ‘அட்வைஸ்’!

சற்றுமுன் தமிழகம் திருச்சி

mrvijayabhaskar - 2026

ஒரு மனிதனுக்கு பதவி ஆசை இருக்கலாம் அனால் பதவி வெறி இருக்கக் கூடாது என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புத்திமதி சொன்னார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

செந்தில் பாலாஜி அதிமுகவிலும் சரி தி.மு.க விலும் சரி செகண்ட் சேனலுக்கு செல்வது தான் வழக்கம் – இந்த முறை செந்தில் பாலாஜிக்கு மக்கள் ரிவீட் அடிப்பது உறுதி என்றார் கரூரில் நடந்த கூட்டத்தில் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 19 ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிடும் செந்தில்நாதனை ஆதரித்து ஆங்காங்கே அமைச்சர் பெருமக்களும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்குகள் சேகரித்து வரும் நிலையில் வரும் 15 ம் தேதி தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதனையொட்டி, செயல்வீரர்கள் கூட்டம், கரூரில் உள்ள கோவை ரோடு பி.எஸ்.ஆர். மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தல் யாரால் வந்தது என்பது பொதுமக்களுக்கு தெரியும், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்போது அ.தி.மு.க வில் இருந்தார், கடந்த 2 ½ வருடங்களுக்கு முன்பு தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடும் பணியாற்றி வெற்றி பெற வைத்தார்.

கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் அப்போது வாழ்த்துக்கள் தெரிவித்த போது எம்.எல்.ஏ வாகி என்ன புண்ணியம், அமைச்சர் தான் லட்சியம் என்று இங்குள்ளவர் பிறக்கும் போதே அமைச்சராக பிறந்தவர் போல நடந்து வந்தார்.

அப்போதும் சரி, இப்போதும் சரி, நன்றியை மறப்பது தான் செந்தில் பாலாஜியின் செயலாகி வருகின்றது. ஆனால், எப்போதும் செகண்ட் சேனல்தான் செந்தில் பாலாஜி என்றும், ஜெயலலிதா இருக்கும் போது, சசிகலா மூலம், செகண்ட் சேனல் சென்றதையும், தற்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், மகன் உதயநிதி ஸ்டாலினையும் பிடித்துக் கொண்டு பதவி கிடைப்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்பவர் தான், செந்தில் பாலாஜி என்றும் கூறினார்.

செந்தில் பாலாஜி நினைத்தால் இரட்டை இலைக்கு வாக்குகள் கேட்பது, பின்னர் குக்கருக்கு வாக்குகள் கேட்பது, இப்போது உதயசூரியனுக்கு என்று கேட்டால் பொதுமக்கள் எப்போதும் முட்டாள் கிடையாது,

ஏனென்றால் செந்தில் பாலாஜி காமராஜரோ, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோ கிடையாது, ஆகவே, தன்னுடைய தொண்டரின் உழைப்பிற்கு எப்போதும் மரியாதை கொடுப்பது தான் ஒரு தலைவனுக்கு அழகு! ஆனால் அந்த தகுதி இல்லாதவர் தான் செந்தில் பாலாஜி!

யாராக இருந்தாலும் நன்றி மறப்பவர் தான் செந்தில் பாலாஜி, ஒரு மனிதனுக்கு பதவி ஆசை இருக்கலாம், ஆனால் பதவி வெறி இருக்க கூடாது!

ஆகவே இந்த அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ரிவீட் அடிப்பது உறுதி என்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.