திருவண்ணாமலை அருகே அரிசேவை அன்னதானப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம்!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

thiruvannamalai annadhanam - 20265 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பேருக்கு வடை- பாயாசத்துடன் உணவிடப் பட்டது.

திருவண்ணாமலை அடுத்த தானிப்பாடி காரைக்கல் தெற்கு பகுதி பொதுமக்களின் சார்பில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நடக்கும் 9ம் ஆண்டு அரிசேவை அன்னதானப் பெருவிழா சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

இதையொட்டி நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வடை- பாயசத்துடன் சாப்பாடு வழங்கப்பட்டது.

thiruvannamalai urvalam - 2026முன்னதாக வெள்ளிக்கிழமையன்று விநாயகர், முருகர், வேடியப்பன், வீரபத்திரன், காமாட்சியம்மன், வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட பெருமான் திருமேனிகள் வாகனங்களில் எழுந்தருளச் செய்யப் பட்டு, தானிப்பாடியிலுள்ள முக்கிய வீதிகள் வழியே ஊர்வலமாகக் கொண்டு  வரப்பட்டன.

அன்னதான பெருவிழாவில் பெருமாள், வீரபத்ரன், முருகர் வள்ளி தெய்வானை, முத்துமாரியம்மன், காளியம்மன், விநாயகர் உள்ளிட்ட பெருமான் திருமேனிகள் முன்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தி: – பி. சாய் செந்தில்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.