இந்தியன் முஜாஹிதீன்கள் பிரிவினைவாதிகள்; பயங்கரவாதிகள் அல்லர்: காங். தலைவர்

indian_mujahideenபனாஜி: இந்தியன் முஜாஹிதீன்கள், நாட்டின் பிரிவினைவாதிகளே தவிர, அதன் உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்று, காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் குர்ஷித் அஹ்மத் சையீத் தெரிவித்துள்ளார். இந்திய, அமெரிக்க அரசுகளால், இந்தியன் முஜாஹிதீன்கள், பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. கோவா காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய சையீத், இவ்வாறு கூறினார். சையீத் குஜராத்தைச் சேர்ந்தவர். இந்திய முஸ்லீம்களிடம் அடிப்படை வாத எண்ணம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியன் முஜாஹிதீன்கள் ஈடுபட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். குறிப்பாக, புனே (2010), வாராணசி (2010), மும்பை (2011)களில் இந்தியன் முஜாஹிதீன்களின் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தும் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்கு அவர், ஐ.மு.கூ. அரசு அவர்களை பிரிவினைவாதிகள் பிரிவின் கீழ்தான் நடவடிக்கை எடுத்தது என்று குறிப்பிட்டார்.