பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

பதான்கோட்:

பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் விமானப் படைத்தளத்திற்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையின் முடிவில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதிப்புமிக்க உயிர்கள் பலியானதற்குக் காரணமான இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே செய்தி அந்நாட்டு அரசு வானொலியிலும் வெளியிடப்பட்டுள்ளது.