இரண்டு நாளில் திருமணம்! ஆனந்தத்தில் ஆடியபடி இருந்த மணப்பெண் சுட்டுக்கொலை!

இந்தியா கிரைம் நியூஸ்
murder

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த அஞ்சால் என்ற 19 வயது இளம்பெண்ணிற்கு இரண்டு தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது.

அதற்கு முந்தைய நாளில் இரவு நேரம் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. உறவினர்கள் பலருடன் கல்யாண குதூகலத்துடன் இருந்த நிலையில், திடீரென சிலர் மணப்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

வீட்டிற்குள் புகுந்த மணப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த இளைஞர் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை சுட்டுள்ளனர். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் மணப்பெண் அஞ்சல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அஞ்சலின் தந்தை மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அஞ்சலின் சகோதரருக்கும் காயம் பட்டுள்ளது.

இதுகுறித்து அஞ்சலின் மூத்த சகோதரர் அளித்த புகாரின் பெயரில், சாகர் என்ற இளைஞர் ஒருவர் எனது தங்கையின் பின்னால் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.27 இரவு, சாகர், அங்கித், ரோஹித் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் இருந்த இருவர் எங்கள் வளாகத்திற்குள் நுழைந்து திருமணத்திற்காக எங்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்,

ஆனால் அவரது காதலை தனது தங்கை ஏற்க மறுத்துள்ளார். பின்னர் வேறொரு இளைஞருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடைபெற்ற நிலையில், சாகர் இக்கொடூரத்தை நிகழ்த்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் தரப்பில் கொலை வழக்கு தொடர்பாக சாகரின் நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான சாகர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.