dalai lama - 2026

வருங்காலத்தில் பெண் ஒருவர் புத்தமத தலைவர் ஆவார் என மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா மும்பையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மும்பை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், சுமார் 15 ஆண்டுகளுக்கு பத்திரிக்கையாளர் ஒருவர் என்னை பேட்டி எடுத்தபோது, வருங்காலத்தில் ஒரு பெண் தலாய் லாமா உருவாவது சாத்தியமா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நான் ஆமாம் என்று பதிலளித்தேன்…

வரும் காலத்தில் பெண்கள் அமைப்பு வலுப்பெறும் போது அது நிச்சயமாக நடக்கும் என்று கூறினேன். புத்த மத பாரம்பரியம் மிகவும் சுதந்திரமானது! ஆண், பெண் இருபாலருக்கும் புத்தர் சம உரிமை கொடுத்தார் என்று கூறினார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending