
வானிலை – எச்சரிக்கை! வங்கக் கடலில் உருவாகி வலுவடைந்த “பெய்ட்டி” புயல் காரணமாக சென்னை நகரில் நேற்று முதல் பலத்த காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் காற்றின் வேகம் பல மடங்கு அதிகரிக்கும். எனவே மரம், பேனர்கள் உள்ளிட்ட காற்றினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பொருட்களின் அருகில் நிற்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டிருக்கிறது.
இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், நாளை முதல் வழக்கமான வானிலை நிலவும் என்றும் வானிலை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது!



