03 09 May Modi nepal - 2026

புது தில்லி: பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக ₹2012 கோடி செலவு ஆகியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் மாநிலங்களவையில் கடந்த வெள்ளியன்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் பினோய் விஸ்வம் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்பினார்.

அப்போது, `‘பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். அதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு?’ என அவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் கூறியபோது… பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 84 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்காக அரசுக்கு ₹2012 கோடி செலவாகியுள்ளது. அவர் பயணம் செய்யும் ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்பு செலவு மட்டும் ₹1583 கோடி… என்றார்!

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending