rahul in parliament - 2026

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமான விவகாரத்தில் இன்னமும் தனக்குத் தோன்றியதைப் பேசிக் கொண்டு, குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறார். உச்ச நீதிமன்றம் இது குறித்து வழக்கினை விசாரித்து, இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று உறுதிப் படுத்திய நிலையில், நீதிமன்றத்தின் கருத்துகளையும் மீறி, ஏற்கெனவே பேசி வந்ததையே மீண்டும் மீண்டும் பேசி வருகிறார்.

அவர் இன்று மக்களவையில் பேசிய போது எழுப்பிய கேள்விகள்!

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.1600 கோடிக்கு வாங்க முடிவு செய்தது ஏன்? என்று ரபேல் விவகாரம் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி சரமாரி கேள்வி எழுப்பினார்.

இந்திய விமானப் படைக்கு 126 விமானங்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை 26 ஆக மாற்றியது ஏன்? ஒட்டுமொத்த தேசமே பிரதமரின் பதிலை எதிர்பார்க்கிறது !

பல்வேறு போர் விமானங்களை தயாரித்த HAL நிறுவனத்துக்கு ரஃபேல் ஒப்பந்தத்தை ஏன் வழங்கவில்லை? ஒரு மணி நேரத்திற்கு உரையாற்றும் பிரதமர் மோடி ரஃபேல் பற்றி 5 நிமிடம்கூட பேசவில்லை!

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

மக்களவையில் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு விவாதம் நடைபெறாமல் தடுத்து பிரதமர் மோடியை பாதுகாக்கின்றனர்!

அனில் அம்பானிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்?

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கு தைரியமில்லை என்று மக்களவையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending