லீக் அவுட் ஆன விஸ்வாசம் கதை! இன்னும் ஒரு வாரம்… ஆனாலும் பொறுமையில்லை!

கிசுகிசு சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
viswasam trailer - 2026

விஸ்வாசம் கதை இதுதான் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்து வைரலாகி வருகிறது.

சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகும் படம் விஸ்வாசம். தல அஜித், நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள விஸ்வாசம் குறித்து தான் சமூக வலைத்தளங்களில் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்நிலையிஒல், இப்படத்தின் கதை குறித்து ஒரு செய்தி கதைக்கப் படுகிறது.

தேனியில் அஜித் ஒரு பெரும் தாதா! ஆனால் வம்புக்கு போகாதவர்; வரும் வம்பை விடாதவர்! அவர் மனைவியின் பிரசவ நேரத்தில் அவரால் அருகில் இருக்க முடியவில்லை. தவிர்க்க முடியாத ஒரு சண்டையில் சிக்கிக் கொள்கிறார்.
சண்டைக்கு வந்தவர்களை அடித்துத் துவைத்துவிட்டு கொஞ்சம் தாமதமாக மனைவி சேர்க்கப்பட்ட மருத்துவமனைக்கு ஓடுகிறார். ஆனால் மனைவி நயன்தாரா இதனால் மனஸ்தாபம் கொண்டு, அஜித்திடம் இருந்து பிரிந்து சென்று விடுகிறார்.

பிறகு 12 வருடம் கழித்து மும்பையில் இருக்கும் தன் மனைவி நயன்தாராவை சந்திக்கிறார் அஜித். விளையாட்டில் படு சுட்டியான அஜித்தின் மகள், ஒரு போட்டியில் கலந்து கொள்கிறார். அப்போது, அந்தப் போட்டியில் எதிர் போட்டியாளராக வந்து நிற்கிறார், அஜித்துக்கு வில்லனாக இருக்கும் நபரின் மகள்.

இதனிடையே தன் மகள் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக, வில்லன் ஒரு கணக்குப் போடுகிறார். அதன்படி, அஜித் மகளை கொல்ல திட்டம் போடுகிறார். அஜித்துக்கு அந்த விஷயம் தெரிய வருகிறது. வில்லனின் சதித் திட்டத்தை முறியடித்து, மகளின் உயிரைக் காப்பாற்றுகிறார், மேலும் போட்டியிலும் மகளை வெற்றி பெற வைக்கிறார்.

பின்னணி முழுக்க விவசாயம் தொடர்புடைய கிராமத்துக் கதையாக எடுக்கப் பட்டிருக்கிறது என்கிறார்கள். ஆனால் இதுதான் கதையா அல்லது கதைக்கப்படும் கதையா என்பது படம் வரும்போது தெரியும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.