டி20 தொடர்: இந்திய அணி பெற்ற ஹாட்ரிக் வெற்றி!

Published:

07 Oct22 dhin Virat Kohli - 2026

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கயானாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. பொல்லார்டு அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கோலி 59 ரன்களும், ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது.

Related articles

Recent articles

spot_img