sivanandi - 2026திண்டுக்கல், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று வேகமாக வந்துள்ளது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக ரோட்டின் குறுக்கே உள்ள தடுப்பில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியது.

இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்கள் யாரென விசாரணை மேற்கொண்ட போது  கோசேந்திர பகுதியைச் சேர்ந்த சிவனாண்டி என்பவரும் அவரது மனைவி ரேணுகா எனவும் தெரிந்தது.

இருவரும் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்தில் சிவனாண்டி மற்றும் பேருந்தின் படியில் நின்று கொண்டு வந்த டிக்கெட் பரிசோதகர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த ரேணுகாவை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றன

ALSO READ:  தொடரும் தெய்வத்திருமேனிகள் திருட்டு; இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending