சபரிமலை விவகாரம்… சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்!

Published:

save sabarimala logo - 2026

சபரிமலை கோயிலில் பெண்கள் இருவர் நுழைந்ததாக வந்த செய்திகளை அடுத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இதை அடுத்து, அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் இன்று அவசர ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் பெண்கள் இருவர் வலுக்கட்டாயமாக உள்ளே தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட்டதைக் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை பல்லவபுரம் பஸ் நிலையம் அருகில் அனைத்து இந்து இயக்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

சபரிமலையின் புனிதம் காக்கத் தவறிய கேரள கம்யூனிஸ்ட் அரசின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்தும் இந்து விரோதப் போக்கைக் கண்டித்தும் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img