மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு

சற்றுமுன் தமிழகம்

pannerselvam

இரு அணிகளின் இணைப்பு சாத்தியப் படாத ஒன்றாகி விட்ட நிலையில், தினகரன் அதிமுக.,வின் தலைமை நிலையத்துக்குச் செல்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதற்குப் போட்டியாக, தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர வேண்டும் என்று அவர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக., அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், இரு அணிகளும் இணைய வேண்டும் என்று கூறி, 60 நாள் ‘கெடு’ விதித்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

ஆனாலும், 2 அணிகள் இணைவது தொடர்பாக நேரடி பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படவே இல்லை. மாறாக, எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி நின்றுகொண்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர அழைப்பு விடுத்து உள்ளார். என தகவல்கள் வெளியாகி உள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.