நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் நிறைவேறியது ஏழை பொதுப்பிரிவினருக்கான 10% இட ஒதுக்கீட்டு மசோதா!

Published:

PARLIAMENT - 2026

புதுதில்லி : பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இன்று நிறைவேறியது. இது மோடிக்குக் கிடைத்த வெற்றி!

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, நேற்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இரவு 10 மணி அளவில், மசோதா தொடர்பான ஓட்டெடுப்பு அவையில் அவை துணைத் தலைவர் ஹரி நாராயண் சிங் தலைமையில் நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் விழுந்தன. இதை அடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப் பட்டது.

அதிமுக, திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ், பகுஜன், சமஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியுள்ள நிலையில், இம்மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட மாட்டாது என்று அவை துணைத்தலைவர் தெரிவித்தார்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img