ராகம் சஹானா… ரசிக்கத் தூண்டும் ஆலாபனை..! நாகஸ்வரத்தில்!

Published:

sahana nagaswaramaalaap - 2026

ஜன்ய ராகங்களில் “சஹானா” சமஸ்கிருத மொழியில் ‘ஸ்ஹானா’ என்றால் ‘பொறுமை’ என்று பொருளாகும். இந்த ராகத்தைக் கேட்பவர் எவ்வளவு கோபக்காரராக இருந்தாலும், தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு, பொறுமையுடன் இருக்கத் தொடங்குவாராம்.

இது 28ஆவது ‘மேளகர்த்தா’வான ‘ஹரிகாம்போதி’யின் ஜன்ய ராகமாகும். இந்த உபாங்க – வக்ர ராகம், இரவு வேளையில் பாட உகந்தது.

கருணைச் சுவை உடைய இது ஒரு பெண்பால் ராகமாகும்.
‘சஹானா’வின் ஸ்வரங்களாவன : ஷட்ஜமம், சதுஸ்ருதி ரிஷபம்,அந்தர காந்தாரம்,சுத்த மத்யமம், பஞ்சமம்,சதுஸ்ருதி தைவதம்,மற்றும் கைஷிகி நிஷாதம்.

ஆரோஹணம் : ஸ ரி க ம ப ம தா நி ஸ்
அவரோஹணம் : ஸ் நி த பம கம ரி ஸ.

‘ சஹானா’ ராகத்தில் அமைந்த கர்நாடக இசைப் பாடல்கள் :

பாடல் இயற்றியவர் பாடல் வகை
கோவிந்தத்யான புரந்தரதாசர் கீர்த்தனை
ஈசுவத தியாகையர் கீர்த்தனை
ராம இக நன்னு பட்டணம் சுப்ரமணிய ஐயர் கீர்த்தனை
அபயம் பயம் முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
நன்னு ப்ரோவஜகதேவா வீணை குப்பையர் கீர்த்தனை
‘சஹானா’ ராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் :

  1. பாடல் தமியேன் பைந்தமிழ் அன்னையின் பாலருந்தி
    படம் சிவகவி(1942)
    பாடியவர் M.K.தியாகராஜ பாகவதர்
    இசையமைப்பாளர் G.ராமநாதன்
    இயற்றியவர் பாபநாசம் சிவன்
  2. பாடல் நிலவே நீதான்…
    படம் சின்னத்துரை(1952)
    பாடியவர் T.R.மகா லிங்கம்
    இசையமைப்பாளர் T.G.லிங்கப்பா
    இயற்றியவர் K.D.சந்தானம்
  3. பாடல் எங்கோ பிறந்தவராம் எங்கோ வளர்ந்தவராம்
    படம் பொம்மை (1964)
    பாடியவர் P.சுசீலா
    இசையமைப்பாளர் S.பாலச்சந்தர்
    இயற்றியவர் வித்வான் லட்சுமணன்
  4. பாடல் பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
    படம் வீர அபிமன்யு(1965)
    பாடியவர் P.B. சீனிவாஸ்,P.சுசீலா
    இசையமைப்பாளர் K.V.மகா தேவன்
    இயற்றியவர் கண்ணதாசன்
  5. பாடல் ருக்கு ருக்கு ருக்கு
    படம் அவ்வை சண்முகி(1996)
    பாடியவர் கமலஹாசன்-சுஜாதா
    இசையமைப்பாளர் தேவா
  6. பாடல் ஆதிநாதன் கேட்கின்றான்
    படம் கங்காகவுரி (1973)
    பாடியவர் T.M.சவுந்தர ராஜன்,S.ஜானகி
    இசையமைப்பாளர் M.S. விஸ்வநாதன்
    இயற்றியவர் கண்ணதாசன்
  • கட்டுரை: அறந்தை மணியன்
ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

Related articles

Recent articles

spot_img