ஜெயலலிதா இறப்புக்கு காரணம் ஆனவர்களை கைது செய்வோம்: மு.க.ஸ்டாலின்

Published:

stalin village meet - 2026

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் ஊராட்சி சபைக் கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இன்று தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் குறிப்பிட்டதாவது…

நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்துக்கு தேவையானதைப் பெற முடியும். ஆட்சி மாற்றம் வர வேண்டும் என நம்மை விட மக்களுக்கே எதிர்பார்ப்பு உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது திமுகவுக்கு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும்.

கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து திமுக முறையாக அறிக்கை கொடுத்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை

stalin village meet2 - 2026

திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா இறப்பில் உள்ள மர்மம் குறித்து விசாரணை செய்து, அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்வோம்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது… என்றார்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img