
ஜன.20 ஆம் தேதி நாளை மாலை 4 மணிக்கு மிகப் பெரும் ஐயப்ப பக்த சங்கமத்தை நடத்துகிறது, சபரிமலை கர்ம சமிதி. திருவனந்தபுரம் புத்திரிகண்டம் மைதானத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில், மாதா அமிர்தானந்த மயி கலந்து கொள்வார்கள் என்று கூறப் பட்டுள்ளது.
சமூக, கலாசார ஹிந்து அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்து, தர்மத்தைக் காக்கும் பணியில் தோள்கொடுப்பார்கள் என்று கூறியுள்ள சபரிமலை கர்ம சமிதி, சபரிமலை மகரவிளக்கு பூஜை முடிந்து நடை அடைக்கும் நாளில் திருவனந்தபுரத்தை ஸ்தம்பிக்கச் செய்து, நம் குரலை உலகுக்கு எடுத்துக் கூறுவோம் என்று கூறியுள்ளது.
இந்த சங்கமத்தில், ஆசார்யர்கள், மதத்தலைவர்கள், ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப குருசாமிகள், ஹிந்து அமைப்புகள் உள்ளிட்ட நம்பிக்கையாளர்கள் பங்கெடுக்கிறார்கள் என்று அறிவித்துள்ளது சபரிமலை கர்ம சமிதி.

நமது கலாச்சாரம் மற்றும் தர்மம் பாதுகாக்க ஐயப்ப பக்தர் மாநாடு
ஜனவரி 20, மாலை 4:00 மணி திருவனந்தபுரம், கேரளம்
அம்மா மாதா அமிர்தானந்தமயி தேவி மற்றும் பல ஆன்மீகத் தலைவர்களும் வருகை தருகிறார்கள் மேலும் 2 லட்சம் அய்யப்ப பக்தர்கள் பங்கு பெறும் நாமஜப ஊர்வலம் நடைபெறும் #KarmaSamithi #AyyappaSangamam



Leave a Reply