முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் பாஜக.,வை திட்டுகிறார் தம்பிதுரை! : டிடிவி ‘பகீர்’!

Published:

thambidurai - 2026

முதலமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில், தம்பிதுரை தொடர்ச்சியாக பாஜக குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்! அவர் இந்த ஆட்சியை கலைக்க விரும்புகிறார் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசிய போது பகீர் கிளப்பினார்.

அண்மைக் காலமாக பாஜக., குறித்தும், மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை. மேலும், அதிமுக., குறித்தும் கூட்டணி குறித்தும் அவர் கூறும் கருத்துகள் அதிமுக.,வினரிடையே சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.தம்பிதுரை, தமிழக பாஜக தலைவர்கள் எங்களை அடிமை எண்ணத்தோடு பார்க்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் மேலும் கூறியபோது, அதிமுக எம்.பி.க்களுக்காக பாஜக எம்.பி.க்கள் குரல் கொடுப்பதே இல்லை என்றும், தங்களுக்கு ஆதரவு கொடுக்காமல் கூட்டணி மட்டும் வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள் என்றும் விமர்சனத்தை முன்வைத்தார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Related articles

Recent articles

spot_img