நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Published:

indian team - 2026

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 38 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ரன் எடுத்தது. இதை அடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், ரோஹித் சர்மா 11 ரன்னில் ஆட்டம் இழந்தார். விராட் கோலி 45 ரன் எடுத்தார்.

ஷிகர் தவான் 75 ரன்னும், அம்பத்தி ராயுடு 13 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இதை அடுத்து இந்திய அணி, 34.5 ஓவரில் 156 ரன் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முன்னதாக, வானிலை சரியில்லாத காரணத்தால் ஆட்டம் தடைப்பட்டது. இதை அடுத்து டக்வொர்த் லீவிஸ் படி வெற்றி இலக்கு 156 ஆக குறைக்கப் பட்டது.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

Related articles

Recent articles

spot_img