மோடியை எதிர்கொள்ள முடியாமல் ஒரு பெண்ணை முன் நிறுத்தியுள்ள ராகுல்!

இந்தியா சற்றுமுன்
rahul priyanka - 2026

மோடியை எதிர்கொள்ளமுடியாமல் ஒரு பெண்ணை முன்னிறுத்தி உள்ளார் ராகுல் காந்தி என்ற விமர்சனங்கள் இப்பொழுது களைகட்டத் துவங்கி உள்ளன

சில நாள்களுக்கு முன்னர் ராகுல் காந்தி ஒரு மிக மிக மோசமான கருத்து ஒன்றைத் தெரிவித்தார்

அது, நிர்மலா சீத்தாராமன் மீதான மோசமான தாக்குதலாகவே கருதப்பட்டது. அப்பொழுது அவர் சொன்னது… மோடி தன்னை எதிர்கொள்ள பயந்து போய் ஒரு பெண்மணியை தனக்கு எதிராக நிறுத்தி இருக்கிறார் என்று கூறியிருந்தார்

நாடாளுமன்றத்தில் ரபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு பதில் சொல்ல இயலாமல், கத்தி கூச்சலிட்டு, எல்லா வகையிலும் தொந்தரவு கொடுத்தனர் காங்கிரஸார்.

இப்பொழுது பிரியங்கா காந்தி அரசியலுக்குள் நுழைத்து விடப்பட்டுள்ளார்! இந்த நேரத்தில் இதே போன்ற கருத்தை ராகுல் காந்தியால் தைரியமாக சொல்ல முடியுமா என்று கேள்விகளை எழுப்புகிறார்கள் அரசியல் நோக்கர்கள்!

தேர்தல் அரசியலில் மோடியை எதிர்க்க இயலாமல் ஒரு பெண்மணியை எதிரில் நிறுத்தி இருக்கிறார் ராகுல் என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.