சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம்: தெவஸம் போர்டு உறுதி!

Published:

sabarimalai supremecourt - 2026

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று சபரிமா தெவஸம் போர்டு உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக தெவஸம் போர்டு கூறியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் தீர்ப்பு எதிரான மறுசீராய்வு மனு இன்று விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதற்கு கோயில் தெவஸம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளது. சபரிமலையை நிர்வகிக்கும் சபரிமலை தெவஸம் போர்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாகவும் இத்தனை ஆண்டுகாலம் தாங்கள் பின்பற்றி வந்த தங்களின் பாரம்பரிய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாகவும் தெவஸம் போர்டு நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

கடந்த வருடம் வரையில், சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை இருந்தது. இதனை எதிர்த்து கம்யூனிஸ மற்றும் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் இந்து ஆசாரங்களை எதிர்க்கும் நாத்திகர்கள் சிலரும், இந்து தர்மத்தை அழிக்க துடிப்புடன் செயலாற்றி வரும் இஸ்லாமியரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஹிந்து மதம் குறித்த புரிதலற்ற வகையில், ஒரு சாரார் கூறும் விவரங்களை மட்டுமே கருத்திக் கொண்டும் இந்து மத ஆசாரங்களைப் பேணும் வழிபாட்டுத் தலத்தின் கோடிக்கணக்கான நம்பிக்கையாளர்களின் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் வேண்டுதலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சென்று வழிபடலாம் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

அதிலிருந்து சபரிமலை தனது இயல்பு நிலையை இழந்து கொந்தளிப்புடன் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப் படும் வகையில், மாநில அரசு உள்நோக்கத்துடன் செயல்படுவதும், பலர் தாக்கப் படுவதும் நடந்தேறியது.

சபரிமலைக்குச் சென்றவர்கள் கடும் துயரங்களுக்கு ஆட்படுத்தப் பட்டார்கள். அதற்குக் காரணமாக, பெண் பக்தர்கள் சிலர் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப் படுவதும் பக்தர்கள் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பப் படுவதுமாக இருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில், ஜன.2ம் தேதி இரண்டு பெண்கள் மட்டும் கேரள கம்யூனிஸ அரசின் நடவடிக்கைகளாலும், போலீஸாரின் பாதுகாப்பிலும் அதிகாலை நேரத்தில் சபரிமலை ஐயப்பன் சந்நிதி முன் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பட்டனர்.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இந்நிலையில், அகில பாரத ஐயப்ப சேவா சமாஜம், கேரளா நாயர் சொஸைட்டி உள்ளிட்ட ஆன்மிக அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு மறு சீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. இந்நிலையில், அந்த மனுக்கள் மீதான விசாரனை இன்று நடைபெற்றது. அப்போது, கேரள தெவஸம் போர்டு இத்தகைய கருத்தைத் தெரிவித்தது. சபரிமலையை நிர்வகிக்கும் தெவஸம் போர்டு, கேரள அரசின் அமைப்பு என்பதும், கேரள அரசின் நிலைப்பாட்டையே பிரதிபலிப்பது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Related articles

Recent articles

spot_img