காஷ்மீர் தாக்குதலை கொண்டாடிய அலிகார் முஸ்லிம் பல்கலை மாணவன்! காவல்துறை வழக்குப் பதிவு!

Published:

aligargh student - 2026

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலைப் பாராட்டிய அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர் மீது காவல்துறை வழக்கு பதிவுசெய்துள்ளது.

ராணுவ வீரர்கள் 40க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை இழந்த நிலையில், நாடே சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்ந்திருக்கும் நிலையில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பாசிம் ஹிலால் என்னும் மாணவர் புல்வாமா தாக்குதல் குறித்து, ”ஜெய்ஷ்- எப்படி? க்ரேட் #காஷ்மீர் #புல்வாமா” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்து மேலும் சில ட்வீட்களையும் அவர் பதிவேற்றியிருந்தார். காஷ்மீரின் பீர்வா பகுதியைச் சேர்ந்த ஹிலாலின் ட்வீட் பலத்த சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்நிலையில், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம், அவரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதனிடையே அலிகர் காவல்துறை அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. தொழில்நுட்ப சட்டப்பிரிவு 153ஏ மற்றும் 67ஏ ஆகியவற்றின் கீழ் ஹிலால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img