5, 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்!

Published:

dpi office chennai - 2026

சென்னை: மத்திய அரசு அறிவுறுத்தியபடி,  இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை கூறியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில்,  2018-19ஆம் கல்வியாண்டு முதல் 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும்.

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை!

தனியார் பள்ளி 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.50 கட்டணம், 8ஆம் வகுப்புக்கு ரூ.100 கட்டணம்!

5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும்

தேர்வுக்கு பின் வினாத்தாளை வட்டார வள மையங்களில் வைக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பலவும், இந்த பொதுத் தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தன.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Related articles

Recent articles

spot_img