சௌதி இளவரசரை கட்டிப் பிடித்து வரவேற்று மரபை உடைத்துவிட்டதாக காங்கிரஸ் எதிர்ப்பு!

இந்தியா உலகம் சற்றுமுன்

saudi prince mode - 2026

புது தில்லி: இந்தியா வந்துள்ள சௌதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மானை பிரதமர் மோடி கட்டிப் பிடித்து வரவேற்பு கொடுத்ததற்கு காங்கிரஸ் கட்சி, மோடி மரபுகளை உடைத்துவிட்டார் என்று குறை கூறி, எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இன்று காலை இந்தியாவுக்கு வந்திருக்கும் சௌதி இளவரசருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி, சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகையில், பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப் பட்டது.

இந்நிலையில், மரபை மீறி தில்லி விமான நிலையத்துக்கே நேரில் சென்று, சௌதி பட்டத்து இளவரசரை வரவேற்ற மோடிக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தான் சென்றுவிட்டு இந்தியா வந்த சௌதி இளவரசருக்கு மோடி வழக்கமான நடைமுறையையும் நாட்டின் மரியாதையையும் உடைக்கும் வகையில் நேரில் சென்று கட்டிப் பிடித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுத்தது குறித்து குறை கூறியுள்ளது.

modi saudi prince - 2026

இதனிடையே சௌதி இளவரசர் சல்மான் பேசிய போது, தாம் இந்த 70 ஆண்டுகளில் இந்தியர்கள் தம் நாடு சிறப்பாக உயர கடினமாக உழைத்துள்ளனர் என்றார். இந்திய மக்கள் தங்கள் நண்பர்கள் எனக் கூறினார்.

பின்னர் இருவர் முன்னிலையிலும், பயங்கரவாத எதிர்ப்பு எரிசக்தித் துறை ஆகியவற்றில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முன்னதாக, இரு தினங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவியதால், தனது பாகிஸ்தான் பயணத்தை ஒரு நாள் ஒத்திவைத்த சௌதி இளவரசர் சல்மான், மறுநாள் தம் அமைச்சரவை சகாக்களுடன் சென்று, ஒப்பந்தங்களை மேற்கொண்டார். பின்னர், பாகிஸ்தானுக்கு சௌதி அரேபியா எப்போதும் துணை நிற்கும்; இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்று கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.