சியோல் அமைதி விருது பெறும் மோடி! தென்கொரியா புறப்பட்டார்!!

இந்தியா சற்றுமுன்

modi photo - 2026

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி தென்கொரியா புறப்பட்டு சென்றுள்ளார்.

தென்கொரியா நாட்டு அதிபர் மூன் ஜேயை சந்தித்து இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் தென்கொரிய தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து பிரதமர் பேசுகிறார்.

தொடர்ந்து, வெள்ளிக்கிழமை நாளை 2018ம் ஆண்டுக்கான சியோல் அமைதி விருதை பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார்.

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பிரதமர் மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் சியோல் அமைதி விருது பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டிருந்தது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.