தமாகா.,வுக்கு ஒரு தொகுதி! ஆனால்… ‘இந்த’ நிபந்தனையால் ஜி.கே.வாசன் அதிர்ச்சி!

gk vasan9 600 10 1491821923 - 2026

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக., கூட்டணியில் ஓர் இடம் கொடுக்க அதிமுக., தலைமை முடிவு செய்துள்ளது. அதே நேரம், இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்றும், சைக்கிள் சின்னத்தில் போட்டியிடக் கூடாது என்றும் விதிக்கப்பட்ட நிபந்தனையால் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார் என்கிறார்கள்!

அதிமுக பாஜக., கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையின் போதே, பாஜக., தம்முடன் உள்ள புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட மூவருக்கு தலா ஒரு தொகுதி கேட்டது. அப்போதும், பாஜக.,வுக்கு மட்டும் ஐந்து தொகுதிகள் என்றும், மற்றவர்களுக்கு ஒரு தொகுதி கொடுப்போம், ஆனால் அவர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடக்கூடாது, மாறாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கூறியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அதே சூத்திரத்தை தமாகா.,விடமும் விதித்ததால் அதன் தலைவர் ஜி.கே.வாசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

2014ல் காங்கிரஸில் இருந்து விலகி த.மா.கா., வை தூசு தட்டி மீண்டும் தொடங்கி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தார் ஜி.கே.வாசன். ஆனால் அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது பிடிக்காமல், முக்கியத் தலைவர்கள் எல்லாம் காங்கிரஸிலும் அதிமுக.விலும் இணைந்தனர். இதனால் கட்சி பெரிதும் கரைந்து போனது.,

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் மக்கள் நலக் கூட்டணியிலிருந்து விலகிய ஜி.கே.வாசன், தனித்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தமாகா இடம் பெற முயற்சி மேற்கொண்டார். ஆனால், தமாகாவை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என ராகுல் காந்தி உறுதியுடன் கூறி விட்டதால், வேறு வழியின்றி அதிமுக கூட்டணியில் இணைய முயற்சி மேற்கொண்டார்.

தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் வாசன் ரகசிய பேச்சு நடத்தினார். அப்போது 4 மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் கேட்டுள்ளார். ஆனால், முதல்வர் பழனிசாமியோ, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் வாசன் விரும்பும் ஒரு தொகுதியை தர தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த வாசன் அடுத்து என்ன செய்வது என்று கட்சியினருடன் ஆலோசித்து வருகிறார்.

[poll id=”8″]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories