தில்லி மெட்ரோவில் பயணித்த மோடி! பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு பொதுமக்கள் பாராட்டு!

Published:

modi in metro train - 2026

தில்லியில் பிரதமர் மோடி சக பயணிகளுடன் மெட்ரோ ரயிலில் பயணித்தார்.  அப்போது பிரதமர் மோடியை உடன் பயணித்தவர்கள் பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவுக்காகப் பாராட்டினர்.

தில்லி கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, இஸ்கான் மைய ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி பயணமானார். இன்று இஸ்கான் -க்ளோரி ஆஃப் இந்தியா கலாசார மையத்தில் நடைபெற்ற கீதா ஆராதனா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோடி மெட்ரோ ரயிலில் பயணித்தார்.

அப்போது, சக பயணிகளுடன் பயணியாக பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். பிரதமர் மோடியைக் கண்ட பயணிகள்,  புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை மூலம் பதிலடி தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டதற்காக பாராட்டினர். இந்த முடிவை மேற்கொண்டதற்காக, பிரதமரைப் பாராட்டிய பொதுமக்கள், இந்திய ராணுவத்துக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பொதுமக்களுடன் பயணித்த போது, சிறார்கள், பெரியவர்கள் என அனைவரிடமும் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, குழந்தைகளையும் கொஞ்சி மகிழ்ந்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குழந்தை ஒன்றை அதன் தாயாரிடமிருந்து வாங்கிய பிரதமர் மோடி, அக்குழந்தையை தனது மடியில் அமரவைத்து அதனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தார்.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img