கொல்லப்பட்ட பயங்கரவாதிகள்… தாக்குதலுக்கு உள்ளான இடம்.. படங்கள் வெளியீடு!

Published:

terro camp - 2026பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் உள்ள படங்கள், பயங்கரவாதிகளின் படங்கள் ஆகியவற்றை இந்திய உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மற்றும் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து படங்களை வெளியிட்டுள்ளது உளவுத்துறை. இன்று அதிகாலை இந்த முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதில் 350க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

mirage airforcestrike - 2026

இந்நிலையில், தாக்குதல் நடந்த இடங்களின் புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.

terror outfits2 - 2026

பாலகோட் பகுதியில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம், ஆயுத கிடங்கு ஆகியவை குண்டுவீசித் தகர்க்கப் பட்டுள்ளது. அந்த ஆயுதக் கிடங்கில் இருந்த துப்பாக்கிகள் 200, கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் டெட்டனேட்டர்கள் ஆகியவை குண்டுவீச்சில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

terror outfits1 - 2026

இந்திய விமானப் படை தாக்குதல் நடத்திய பயிற்சி முகாமில், கட்டடத்தின் படிக்கட்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் நாட்டு தேசியக்கொடிகள் வரையப்பட்டுள்ளன. இவற்றின் மீது மிதித்து நடந்து செல்லும் வகையில் அந்த நாடுகளின் தேசியக் கொடிகளை தரை விரிப்புகளாக பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இன்று நடத்தப் பட்ட தாக்குதலில் ஆப்கன் மற்றும் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய மௌலானா அம்மார், மசூத் அசாரின் சகோதரர் மவுலானா தல்ஹா சயீப், மூத்த சகோதரன் இப்ராஹிம் அசார், முப்தி அசார் கான் உள்ளிட்டோர் கொல்லப் பட்டுள்ளன.

இந்தப் படங்களை உளவுத் துறை வெளியிட்டிருக்கிறது.

pakistan pictures terrorist camp - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img