உங்கள் அசாத்திய வீரத்தைக் கண்டு நாடே பெருமை கொள்கிறது: மோடி டிவீட்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

abhinandann - 2026

பாகிஸ்தான் நாட்டில் இருந்து அந்நாட்டு அதிகாரிகளால் இன்று இரவு 9 மணி அளவில் இந்திய ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டார் இந்திய விமானி அபிநந்தன்.

இந்நிலையில், அபிநந்தனை வரவேற்று மோடி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், நாட்டுக்கு திரும்பி வரும் விங் கமாண்டர் அபிநந்தன் வருக வருக. உங்கள் அசாத்திய வீரத்தைப் பார்த்து இந்த நாடே பெருமை கொள்கிறது. நமது ராணுவ வீரர்கள் 130 கோடி இந்தியர்களுக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்கள்!
வந்தே மாதரம் என்று பதிவு செய்துள்ளார்.

abhinandan1 - 2026

முன்னதாக இன்று பிற்பகல் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழகம்தான் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனைத் தந்துள்ளது. இன்று நாம் எல்லோரும் கொண்டாடும் நம் விமானி அபிநந்தன் தமிழகத்தைச் சார்ந்தவரே.. என்று பாராட்டு தெரிவித்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.