மிஸ்டர் க்ளீன் மனோகர் பாரிக்கர் கடைசியாகக் கையெழுத்திட்ட அரசுக் கோப்பு!

Published:

Manohar Parrikar Vishwajit Rane - 2026

கோவா முத்ல்வராக மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி அரசு கோப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி கோப்பு பற்றியும், அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும் கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே நினைவு கூர்ந்துள்ளார்.

மருத்துவமனைகள் மற்றும் ஊட்டச்சத்து திட்டம் தொடர்பான கோப்பில் மனோகர் பாரிக்கரின் கையெழுத்தைப் பெறுவதற்காக, தாம் மருத்துவமனைக்கே சென்றதாக ராணே கூறியுள்ளார்.

மரணத்தின் விளிம்பில் இருந்த போதும் கூட தன்னை உள்ளே அழைத்த முதல்வர் மனோகர் பாரிக்கர், கோப்பினை உ டனடியாக சரி பார்த்து கையெழுத்திட்டு அனுப்பியதாக  வியப்புடன் குறிப்பிட்டுள்ளார். இது தான் முதல்வராக மனோகர் பாரிக்கர் கையெழுத்திட்ட கடைசி கோப்பு என ராணே உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

குழல், சிறுநீர்ப் பை உடலில் பொருத்தப்பட்ட நிலையிலும் அரசுப் பணிகளை மனோகர் பாரிக்கர் சிறப்புடனும் தொய்வின்றீயும் ஆற்றியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கோவா அரசியலில் தற்போது நிரந்தர வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்று  வருத்தம் தெரிவித்துள்ளார். இவ்வாறே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

Related articles

Recent articles

spot_img