இது ஏதோ இறுதிக்கட்ட யுத்தம் போன்றும், ராமேஸ்வரம் கோவிலை இந்துத்துவவாதிகள் கைப்பற்றி விடாமல் தடுக்க வேண்டுமானால் முஸ்லீம் லீக் கட்சிக்கு வாக்களித்து பாஜகவை வீழ்த்துங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ஆடியோ பதிவு ஒன்று வைரலாகப் பரவியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர்கள் ராமேஸ்வரம் கோயிலைக் கைப்பற்றி நாசம் செய்துவிடாமல் இருக்க பாஜக.,வுக்கு வாக்களியுங்கள் என்று பலரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

திமுக., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதவாதக் கட்சியான முஸ்லிம் லீக் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக – முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் இந்துக்கள் 69% பேரும் இஸ்லாமியர்கள் 22.4% பேரும் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இங்கே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக.,வின் சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, இங்கே இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை. இன்று மாலை பாஜக., வேட்பாளர்கள் குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருந்தார்.

இருப்பினும், இங்கே வேட்பாளராக நெல்லையைச் சார்ந்த நயினார் நாகேந்திரன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகக் கூறப் படுகிறது.

பாஜக கடந்த முறை ராமநாதபுரம் நகராட்சியில் அதிக வாக்குகளை பெற்றது, அதிமுக கிராமங்களில் அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது எனவே இரு கட்சி வாக்குகளும் இணைந்து இந்த முறை வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப் படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு ஆடியோ பதிவு வாட்ஸாப்பில் வைரலாகப் பரவி வருகிறது, அதில் இஸ்லாமியர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் இந்துக்களை பிரதிபலிக்கும் பாஜகவை வீழ்த்த முஸ்லீம் லீக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்றும், தினகரன் கட்சியிக்கு வாக்களித்தால் நிச்சயம் வாக்குகள் பிரிந்து பாஜக வெற்றி பெற்று விடும் என்றும் அதில் வலியுறுத்தப் படுகிறது.

மேலும், பாஜக வெற்றி பெற்றால் ராமேஸ்வரம் புனித தலத்தினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும், இதுவே அமித் ஷாவின் திட்டம் என்றும் அந்த வாட்ஸ் அப் ஆடியோவில் கூறப்படுகிறது. எனவே எப்படியாவது பாஜக.,வை வீழ்த்தி ராமேஸ்வரத்தைக் கைப்பற்றும் செயலை இஸ்லாமியர்கள் தடுத்து நிறுத்த எந்தக் கட்சியில் இருந்தாலும் முஸ்லீம் லீக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தப் படுகிறது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் பரவி வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தை தடுக்க வேண்டுமானால் பாஜக.,வுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், ராமேஸ்வரம் புனிதத் தலத்தை காப்பாற்ற இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


பிரதமர் மோடியின் சௌகிதார் - காவல்காரன் என்ற இயக்கம்!

View Results

Loading ... Loading ...

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...