
புதுக்கோட்டையில் கலர் கோலப் பொடிகள் விற்பனை… பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.
மார்கழி மாதம் முழுவதும், பெண்கள் தினமும் வீட்டுவாசலில் கோலமிடுவது வழக்கம். குறிப்பாக, வண்ணக்கோலம் போட்டு மகிழ்வார்கள் அதற்க்கான . கலர் பொடிகள் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது.
இதனால் புதுக்கோட்டையில் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மார்கழி மாதத்தில் பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த மாதத்தில் இருக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலையில் எழுந்து வீடுகளுக்கு முன்பு பல்வேறு வண்ணங்களில் கோலங்கள் போட்டு அசத்துவார்கள். இதற்கு மிக முக்கியமாக வண்ண கோலப்பொடி தேவைப்படுகிறது. புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவிலின் அருகிலுள்ள ஜி. டி. என். பூஜை பொருட்கள் கடையில் விற்பனை தொடங்கி உள்ளது.
மேலும் இந்த சீசனை கருத்தில் கொண்டு நகரில் சாலையோர கடைகளில் தள்ளுவண்டிகளிலும் ஆங்காங்கே பல வண்ண கலரில் கோலப்பொடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த விற்பனையும் தற்போது அதிகரித்து வருகிறது. ரூ.10. முதல் ரூ.100 வரை கோலப்பொடி பாக்கெட்டுகள் விற்பனை செய்கிறார்கள். இதனை பொதுமக்கள் பலரும்ஆர்வத்துடன் விரும்பி வாங்கி செல்கிறார்கள்
- செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை