மோடிக்கு ஆதரவளித்தால் கொலை செய்வோம்! இஸ்ரோ மாதவன் நாயருக்கு ஜெய்ஷ் எச்சரிக்கை!

Published:

isro madhavan nair - 2026

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு கொலை மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயருக்கு ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.  மோடிக்கு ஆதரவு அளித்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

புல்வாமா தாக்குதலை நடத்திய பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ -மொஹம்மத் அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டுள்ள  கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

75 வயதாகும் மாதவன் நாயர், கடந்த 2009-ஆம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்தார்! கடந்த ஆண்டு பாஜக.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இவருக்கு 2 நாட்களுக்கு முன் ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக இருந்தால் கொலை செய்து விடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் அனுப்பப் பட்டுள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இதையடுத்து மாதவன் நாயர் கேரள போலீஸில் புகார் அளித்தார். இந்தக் கொலை மிரட்டல் குறித்து உளவுத்துறை தமக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்!

Related articles

Recent articles

spot_img