ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயரிய விருது மோடிக்கு வழங்கப் படுகிறது!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

arab award - 2026

@PMOIndia @narendramodi செயல்பாட்டை பாராட்டி ஐக்கிய அரபு அமீரகம் @MohamedBinZayed ஜனாதிபதி விருதை அறிவித்து இருக்கிறது.

துபை: ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம் பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது.

அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் மாநிலங்களின் தலைவர்களுக்கு இந்த உயர்ந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த குடிமகனுக்கான விருதை வழங்கி கவுரவிக்க உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் உறவுகளை பராமரிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிகளை அநாட்டு அரசு பாராட்டியுள்ளது.

அந்நாட்டின் உயரிய சயித் பதக்க விருதை இந்திய பிரதமர் மோதிக்கு வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி ஷேக் கலீபா பின் சயத் அல் நஹியான் ஒப்புதல் வழங்கியுள்ளார் என அதன் டெபுடி சுப்ரீம் கமாண்டர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் நல்லுறவு வைத்துள்ளோம்! இந்த உறவை பிரதமர் மோடி வலுப்படுத்தியதுடன், முக்கியத்துவம் கொடுத்தார்! இரு நாடுகளுக்கும் நீண்ட கால நட்பு மற்றும் கூட்டு ஒத்துழைப்பை உறுதிப் படுத்துவதில் நரேந்திர மோடியின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.

1 thought on “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் உயரிய விருது மோடிக்கு வழங்கப் படுகிறது!”

  1. உலகப்புகழ் பெற்ற நம் பாரத பிரதமரை இந்தியர் ஒவ்வொருவரும் போற்ற வேண்டும். மீண்டும் திரு. நரேந்திர மோடி அவர்களே நமக்கு பிரதமராக வேண்டும் என்று உறுதி kooruvom

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.