சித்திரை விஷூ பூஜைக்காக… சபரிமலை நடை 10ஆம் தேதி திறப்பு!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

sabarimalai natai open - 2026

சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலையில் 10ம் தேதி நடைதிறக்கப் படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 15ஆம் தேதி சித்திரை விஷூ சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. இதற்காக கோயில் நடை வரும் 10ம் தேதி திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சித்திரை விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கமான நடைமுறை. இந்த முறை தேர்தல் வேறு வருவதாலும், சபரிமலை பிரச்னை அரசியல் பிரச்னையாக உருவெடுத்ததாலும், நடை திறப்பு நேரத்தில் பரபரப்பு ஏற்படுவதும் எதிர்பார்க்கப் படும் ஒன்றாகிவிட்டது.

மகரபூஜை, மகரவிளக்கு, மண்டல பூஜைக் காலங்களில் பெண்களை சபரிமலை சந்நிதி முன் நிறுத்தியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்ட கேரள அரசு, தேர்தல் நேரம் என்ற போது கொஞ்சம் அடக்கி வாசித்தது.

இந்துக்களின் எதிர்ப்பு வாக்குகள் தனக்குக் கிடைக்காமல் போகுமே என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தது கேரள கம்யூனிஸ அரசு. இப்போதும், விஷு புண்யகால நடை திறப்பின் போதும், பெண்கள் அனேகமாக அனுமதிக்கப் பட வாய்ப்பில்லை என்றும் ,அதை மாநில அரசு விரும்பாது என்றும் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.