பின்வாங்கும் பிரியங்கா..! வாராணசியில் போட்டியில்லை?! மோடிஃபோபியா!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

priyanka gandhi - 2026

வாரணாசியில் போட்டியிடாமல் பிரியங்கா பின்வாங்குவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அவருக்கு மோடிஃபோபியா – என்ற மோடி மீதான அச்சம் அதிகரித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாராணசி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்று கூறப் பட்டது. ஆனால், அவர் போட்டியிடுவதிலிருந்து, அச்சத்தின் காரணமாக பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தரப் பிரதேச காங்கிரசின் கிழக்கு மண்டல பொதுச் செயலாளராக, கடந்த ஜனவரி மாதம் பிரியங்கா ராபர்ட் வத்ரா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராகுலுடன் பல இடங்களுக்கும் சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில், வாராணசி தொகுதியில் மோடிக்கு எதிராக பிரியங்கா வத்ராவை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிடுவதாக கூறப்பட்டது. ஆனால், மோடியின் செல்வாக்குக்கு முன்னால் தாம் எடுபடமாட்டோம் என்று பயப்படும் பிரியங்கா வத்ரா, தாம் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.