‘ஓசிச்சோறு’க்கு வக்காலத்து வாங்கும் ‘பழையசோறு’! இந்து விரோதப் பேச்சு எல்லை மீறிப் போச்சு!

Published:

stalin veeramani speech - 2026

கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி சர்ச்சையாக பேசியிருந்தால் அது தவறு… என்று கூறியுள்ளார். மு.க. ஸ்டாலின்.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் குறித்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, கிருஷ்ணர்தான் இது போன்ற பாலியல் குற்றவாளிகளுக்கெல்லாம் முன்னோடி என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கிருஷ்ணர் யாதவ குலத்தவர். தமிழகத்தில் உள்ள கோனார் பிரிவைச் சேர்ந்தவர் என்று அம்மக்கள் அதிகம் கொண்டாடுகின்றனர். ஆனால், இதே வீரமணியும் சாரங்கபாணி கோனார் என்ற இயற்பெயரைக் கொண்டவர்தான்! குலத்தை வேரறுக்கும் கோடரிக் காம்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கி.வீரமணி, இப்போது, அதே யாதவ சமுதாயத்தினரால் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியிருக்கிறார்.

இந்நிலையில், சாரங்கபாணி கோனார் என்ற கி.வீரமணியை கண்டிக்க மனமில்லாத மு.க.ஸ்டாலின், அவர் பேச்சுக்கு முட்டுக் கொடுத்து, வக்காலத்து வாங்கியுள்ளார்.

மேலும், ‘கோயில்கள் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது’ என்ற திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி என்ற திமுக.,வின் வரிகளை மேற்கோள் காட்டி, மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

stalin veeramani hug - 2026

அப்போது அவர், கிருஷ்ணர் குறித்து கி.வீரமணி பேசியது பெரியார் திடலில்.! தேர்தல் பிரசாரத்தில் அல்ல!. கி.வீரமணி பேச்சை ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்பினர் தவறாக சித்தரித்து பரப்பிவிட்டார்கள். கிருஷ்ணரைப் பற்றி கி.வீரமணி உள்நோக்கத்தோடு பேசவில்லை என்று கூறினார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.!

ஆனால், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வரும் பலரும், வீரமணி என்ன பேசினார் என்பது உலகிற்கே தெரிந்தது! அவரை கண்டிக்க சொன்னால் ஸ்டாலின் என்ன சொல்கிறார் என்றால் அவர் தவறாக பேசவில்லையாம்! அப்படி பேசியிருந்தால் தவறாம்!

stalin veeramani - 2026

அதாவது அவர் என்ன பேசினார் என தெரியாதாம் ஆனால் அவர் தவறாக பேசவில்லையாம்! உளறலுக்கும் ஒரு அளவில்லையா? இன்னமும் திக வீரமணியினை கண்டிக்க ஸ்டாலினுக்கு விருப்பமில்லை, ஆனால் பேச்சுமட்டும் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல‌! ஆனால் சொல்ல மறக்கும் விஷயம் “நாம் இந்துக்களுக்கு ஆதரவானவர்களும் அல்ல..”. என்பதுதான்!

எனவே இஸ்லாம், கிறிஸ்தவம் என்று மதங்களுக்கு ஆதரவானவர்களாகவும் அந்த மதங்களையே சேர்ந்தவர்களாகவும் இருக்கும் பகுத்தறிவுவாதி திராவிட இயக்கங்கள், என்னாளும் இந்துக்களுக்கு நாங்கள் ஆதரவானவர்கள் என்று வாய்திறந்து சொல்லப் போவதில்லை! எனவே திமுக., கூட்டணியில் உள்ளவர்களுக்கு வாக்களித்து நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப் போடக் கூடாது என்ற பிரசாரத்தை பலமாக முன்னெடுத்துள்ளனர் சமூக ஊடகங்களில்!

இந்துக்களுக்கு எதிராக பேசுவதை, இந்துக்கள் மனம் புண்படும்படி பேசுவதை, திமுக., திக., தலைவர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவர்களில் கீ.வீரமணி, சுப.வீரபாண்டியன், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரின் பேச்சுக்கள் இந்து கடவுள்களை அவன், இவன் என்று சாடுவதும் பகுத்தறிவு என்ற பம்மாத்து காட்டி, அவதூறாகப் பேசுவதும் அதிகரித்தே வருகிறது.

முன்னர் கி.வீர்மணிக்கு ‘ஓசிச்சோறு’ என்று பட்டம் கொடுத்திருந்தார் அழகிரியின் மகன் துரை தயாநிதி! இப்போது ஸ்டாலினுக்கும் பழையசோறு பட்டம் கொடுத்திருக்கிறார்கள் சமூக வலைத்தளத்தில்! அப்பன் சம்பாதிச்சி வெச்சதை அமுக்கிக் கொண்டு தின்று தீர்க்கும் பழையசோறு என்று குறிப்பிட்டு வருகிறார்கள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img