கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை! வன்புணர்வு செய்து எரித்துக் கொலை!

இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன்

college girl bangalore - 2026

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

கர்நாடகாவில் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள காட்டுப் பகுதியில் உடல் சிதைந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி மரத்தில் தொங்கிய நிலையில், ஓர் இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பெண்ணின் உடல் பாதி எரிந்த நிலையில் காணப் பட்டுள்ளது.

இதை அடுத்து, போலீசாரின் விசாரணையில் அது கடந்த 13ஆம் தேதி மாயமான நவோதயா பொறியியல் கல்லூரியில் படிக்கும் மது என்ற மாணவியின் உடல் என்பது தெரியவந்தது.

அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதும் கண்டறியப் ப்பட்டுள்ளது.. தொடக்கத்தில் தற்கொலை எனக் கருதப் பட்ட நிலையில், பிரேத பரிசோதனையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியானது.

இது நிர்பயா விவகாரம் போல் விஸ்வரூபம் எடுத்துள்ளது! தொடக்கத்தில் மது தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் கருதினர். ஆனால் மதுவின் பெற்றோரும் நண்பர்களும் மரத்தில் தொங்கிய அரைகுறை நிலையில் எரிந்த மதுவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

இதை அடுத்து, இதில் வேறு ஏதோ விவகாரம் இருப்பதாக சந்தேகப்பட்டனர். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதி, மதுவின் கொலைக்கு நியாயம் கேட்டு கல்லூரி நண்பர்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுவின் கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் கொலைக்கான காரணங்களை கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்து மாணவர்கள் சாலைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஒருவரை கைது செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது!

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் கோபத்துடன் இந்த விவகாரம் குறித்து அதிகம் பேர் புகைப்படங்களை பதிவிட்டு தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.