தொடர் குண்டு வெடிப்புகள்: இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும்: மோடி!

Published:

modi photo - 2026

புது தில்லி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுடன் இந்தியா என்றும் உறுதுணையாக நிற்கும் என்றும் அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மோடி தனது டிவிட்டர் பதிவில்…

இலங்கையில் நடந்த கொடூர சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இது குறித்து பெரும் கவலையுற்றேன். இந்த துயரமான நேரத்தில் இலங்கை மக்களுக்கு ஆறுதல் கூறுகிறேன்.

பயங்கராவதத்திற்கு இந்தப் பிராந்தியத்தில் இடமில்லை. குண்டு வெடிப்பில் பாதிக்கப் பட்டவர்கள் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.. என்று கூறியிருக்கிறார்.

மேலும் சிங்களத்தில் அவர் எழுதியுள்ள டிவிட்டர் பதிவிலும், பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் போரிட வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இந்தக் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப் படுவர். இலங்கை அரசுக்கும் இலங்கை மக்களுக்கும் இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Related articles

Recent articles

spot_img