வாண்ட்டடா வாலிபனை வரச்சொல்லி… வாங்கிக் கட்டிக்கிட்ட திக்விஜய் சிங்! பின்னே… மோடியைப் புகழ்ந்தா…?!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

digvijaysingh mp - 2026

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் பிரசாரக் கூட்டத்தில் ஓர் இளைஞர் மேடை ஏறி பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசினார். அதைக் கேட்டு அதிர்ந்து போனார் திக்விஜய் சிங்.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங். போபாலில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், கூடியிருந்த இளைஞர்களை நோக்கி, “உங்களுக்கு மோடி 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தாரா?” எனக் கேட்டார்.

அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல ஓர் இளைஞர் கை தூக்க… அவரை வா .. வா… என்று மேடைக்கு அழைத்தார் திக் விஜய் சிங்.

எங்க அக்கவுண்ட்ல ரூ.1 கூட வுழலீங்க என்று அந்த இளைஞர், தமிழக டிவி மீடியாக்கள் முன் எப்போதும் அழுது தீர்க்கும் நபர்களைப் போலானவர் என்று நினைத்து, மைக்கை அந்த இளைஞரிடம் நீட்டினார்.

அப்போது அந்த இளைஞர், “மோடி ஜி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி பயங்கரவாதிகளைக் அழித்தார்” என்று முதல் வார்த்தைதான் கூறினார்… அதற்குள் ரூட்டு எங்கயே மாறுதே என்று விழித்துக் கொண்ட திக்விஜய் சிங், படக்கென்று அந்த இளைஞரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கினார்… போடா போடா… என்று துரத்திவிட, காங்கிரஸ் குண்டான தொண்டர்கள் ஓடி வந்து, விரட்டாத குறையாக அந்த இளைஞரை கீழே இறக்கி விட்டனர்.

அனேகமாக அதே இளைஞருக்கு பாஜக.,வின் பிரசாரக் கூட்டத்தில் மைக் பிடிக்க ஒரு வாய்ப்பு வந்தாலும் வரலாம்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.