வன்முறையை ஏற்படுத்தாமல் விடமாட்டோம்! மமதாவின் ரவுடிகள் ரவுண்டு கட்டுகிறார்கள்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

amitsha kolkatta - 2026

நாங்கள் வன்முறையை ஏற்படுத்தாமல் விடவே மாட்டோம் என்று ரவுண்டு கட்டி அடிக்கிறார்கள் மம்தா பானர்ஜியின் ரவுடிகள்!

இன்று பாஜக., தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியைத் தொடர்ந்து பெரும் வன்முறைகளை அரங்கேற்றினர் மம்தா பானர்ஜியின் குண்டர் படையினர்.

மேற்கு வங்கத்தில் அமித்ஷா பிரசார பேரணியின் போது, பாஜக., – திரிணமுல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் கடைசிக் கட்டமாக வரும் 19ஆம் தேதி, மேற்கு வங்கம், ம.பி., பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சாலை பேரணியில் இன்று கலந்து கொண்டார்.

தொண்டர்கள் புடைசூழ சாலையில் பேரணி சென்ற அமித்ஷாவுக்கு திரிணமுல் கட்சியினர் கறுப்புக் கொடி காட்டினர். இதை அடுத்து திரிணமுல் ஆதரவாளர்களுக்கும் பாஜக., தொண்டர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. திரிணமுல் தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதை அடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

அமித் ஷாவின் பேரணியை தடுக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாஜக., ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே, கோல்கத்தா நகரெங்கும் காவியலை கடலலை போல் ஏற்பட்டுள்ளதாக வடநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.