கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா நாளை விருந்து!

Published:

amit shah - 2026

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜகவின் தலைவர் அமித்ஷா நாளை விருந்து கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜகவின் தலைவர் அமித்ஷா சார்பில் நாளை தில்லியில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

தில்லியில் நாளை அமித்ஷா விருந்து அளிக்க உள்ளதாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது  என்றும், மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார் அமித்ஷா என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக வாக்களிப்புக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாயின. அதில் பாஜக பெரும்பான்மை பெறும் என்று கூறப்பட்டிருந்தது. பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுவதால் பாஜக கூட்டணியினர் மகிழ்ச்சியில் உள்ளனர்!

Related articles

Recent articles

spot_img