அமித் ஷா அளித்த விருந்து: கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா அளிக்கும் விருந்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இந்த விருந்து நடைபெறுகிறது.

amithsha dinner

பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா அளிக்கும் விருந்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். புதுதில்லியில் உள்ள அசோகா ஹோட்டலில் இந்த விருந்து நடைபெறுகிறது.

இந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தே.ஜ கூட்டணித் தலைவர்கள் தில்லி சென்றிருந்தனர்.

இந்த விருந்தில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அவரது மகன், பீகார் முதல்வர் நிதீஷ்குமார், அகாலி தளம் கட்சி தலைவர்கள், ராஷ்டீரிய லோக்தளம் கட்சி தலைவர் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

மேலும், பாஜக.,வைச் சேர்ந்த அமைச்சர்கள் நிதின் கட்கரி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Advertisements

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.