ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோதி!

Published:

modi met president - 2026

குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக.,வின் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட நரேந்திர மோதி.

17வது மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது *வரும் 30ஆம் தேதி 2வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோதி.

முன்னதாக பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றுள்ளது. இதில் பாஜக மட்டுமே 303 எம்.பி.,க்களைப் பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.

சிவசேனா, சிரோண்மனி அகாலிதள், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி மற்றும் அதிமுக., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சேர்த்து, மொத்தம் 50 எம்.பி.,க்கள் உள்ளனர். pmmodi met president - 2026

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

இந்நிலையில், புதிதாக வெற்றி பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.,க்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை இன்று  மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

நரேந்திர மோதி, பாஜக., தலைவர் அமித்ஷா, பாஜக., மூத்த தலைவர் லால்கிஷன் அத்வானி, அகாலிதள தலைவர் பிரகாஷ்சிங் பாதல், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், அதிமுக., எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் புதிய அரசின் திட்டங்கள் மற்றும் அமைச்சரவை குறித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டன.

தொடர்ந்து நாடாளுமன்ற பாஜக., தலைவராகத் தேர்வு செய்யப் பட்ட நரேந்திர மோதி, ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்தார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img