தாம் முதல்வர் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமூல் கங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

மேற்கு வங்கத்தில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதே போன்ற வெற்றியை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கோடிட்டுக் காட்டிய போது, மம்தா அதிர்ந்து போனார்.

வெறும் 2 எம்.பிக்களை மட்டுமே வைத்திருந்த பாஜக., தற்போது 18 எம்.பிக்களை கைப்பற்றி விட்டது. அதைவிட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு சமமாக வாக்கு சதவீதத்தையும் பிடித்துவிட்டது. இது திரிணாமூல் கட்சியின் தோல்வி எனப் படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நான் முதல்வராக தொடர விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகளிடம் தெளிவாகக் கூறினேன். ஆனால் அவர்கள் என்னை ராஜினாமா செய்யக் கூடாது என்றனர். எனவே அவர்களது விருப்பத்தை நிறைவேற்றவே முதல்வராகத் தொடர்கிறேன்.

கட்சி எனக்கு மிகவும் நெருக்கமானது. மிகச்சிறிய அளவில் இருந்து கட்சியைக் கட்டமைத்தேன். பதவி என்பது எனக்கு முக்கியமில்லை.

மத்திய பாதுகாப்பு படைகள் எங்களுக்கு எதிராக பணியாற்றின. எமர்ஜென்ஸி போன்ற நிலை உருவாக்கப்பட்டது. இந்து – முஸ்லிம் பிரிவினை உருவாக்கப்பட்டு வாக்குகள் பிரிக்கப்பட்டன. தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார் மம்தா பானர்ஜி.

I told my party I don’t want to continue as CM. I have been subject to gross humiliation. My party did not accept it. I was alone. So I have to continue according to the wishes of my party

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...