ராகுல் வேண்டாம்… சோனியாவே தொடரட்டும்: ஷீலா தீட்சித்

rahul-gandhi-soniaகாங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே தொடரவேண்டும், ராகுல் காந்தி எல்லாம் வேண்டாம்; அவரது தலைமை கேள்விக்குரியது என்று கூறியிருக்கிறார் தில்லி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ஷீலா தீட்சித். நாளை ராகுல் தில்லிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ராகுல், காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்று செய்திகள் வெளியான நிலையில், ஷீலா தீட்சித் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், இந்தச் செய்தி வெளியான சில நிமிடங்களில், தாம் சோனியா காந்தியை புகந்து பேசியதாகவும், ராகுல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கான நல்ல தேர்வாக இருப்பார் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.