சாதாரண பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் விஐபி.,க்கள் வருடம் ஒருமுறை திருமலை வரவேண்டும்!

Published:

venkaiah naidu - 2026

திருப்பதி எழுமலையான் கோயிலில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம் செய்தார் அப்போது அவர், பசி, ஊழல் இல்லாத சமூகம் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை ஜனாதிபதியை வெங்கைய்ய நாயுடு இன்று காலை குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு, ஏழுமலையான் கோவிலில் ஆண்டிற்கு ஒருமுறை ஏழுமலையானை தரிசனம் செய்வது தனது வழக்கம். அதன்படி இன்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தது தனக்கு மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் வழங்கியுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் இங்கு சுவாமி தரிசனத்திற்கு வரவேண்டும். இதன் மூலமாக சாதாரண பக்தர்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் இருக்கும்.

நல்ல மழை பெய்து விவசாயிகள் மகிழ்ச்சியாக ஆனந்தத்துடன் விவசாயம் பயிரிட வேண்டும். ஊழல் பசி, இல்லாத சமூகம் அமைய வேண்டும்.

நான் அரசியலில் இல்லை! துணை ஜனாதிபதியாக உலகம் முழுவதும் சென்று வருகிறேன். ஐக்கிய நாடுகளின் சபையில் பங்கேற்று உலக அமைதிக்காகவும் , வன்முறையை ஒழிக்க மக்கள் கருத்துகளை கேட்டு அதற்கு ஏற்ப செயல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

நாட்டிற்கு சேவை செய்யக்கூடிய சக்தியை தனக்கு தர வேண்டும் என ஏழுமலையானை வேண்டிக் கொண்டேன். தீவிரவாத ஒழிப்பு, உலக அமைதி, இயற்கை, கலாச்சாரம் பாதுகாக்க வேண்டும் என சுவாமியை வேண்டிக் கொண்டேன் என்றார் அவர்.

Related articles

Recent articles

spot_img